எழுத்தாளர்: ப்ரஸன்னா வெங்கடேஷ்
எத்தனை நேரம் அதுவும் நானும் முறைத்துக் கொண்டே இருந்தோமோ தெரியவில்லை. ஒரு
சமாதானத்துக்கும் எங்களால் வர முடியவில்லை. நேற்று இரவு ஆரம்பித்த போராட்டம்.
முதலில் நான் அதைப் பார்த்தது ப்ரிட்ஜ் கதவுக்குப் பின்னால். மீசையை தீவிரமாய்
முறுக்கியபடி , “ முடிஞ்சா அடிச்சுப் பாரு” என்று அது சவால் விட்டது. திடீரென்று ஜென்ம்
விரோதியைப் பார்த்த பயத்திலும் அருவருப்பிலும், துடைப்பத்தை எடுக்க ஓடினேன். திரும்பி
வந்து பார்த்தால், அது பதுங்கிடத்தைத் தேடி ஓடியிருந்தது.
பிறகு, எல்லாக் கடவுள்களையும் வேண்டியபடி சமையலை செய்து கொண்டிருந்த போது,
உப்பு டப்பாவை எடுக்க முயற்சித்த போது, மறுபடியும் அது… மாட்டிக் கொண்ட
அதிர்ச்சியோடு … இந்த முறை கரப்பான் மருந்தை எடுக்க ஓடிய போது, ஊரிலிருந்து அம்மா
போன் செய்ய, “ பாத்தியா, இந்த தடவையும் நான் எஸ்கேப்” என்றபடி கம்பீரமாய் நின்றது
அந்த கரப்பான் பூச்சி.
முற்றும்.
