எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
அனுதினமும் பெரியப்பாவின் சைக்கிள் கடையில் பழைய டயரை தேடுவேன்
அவரிடம் திட்டுவாங்கிக்கொண்டே. வாயில் கார் ஓட்டிக்கொண்டே
மைதானத்திற்கு ஓடிப்போய் டயர் பந்தயத்தை வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்
டயர் இல்லாததால். ஓர் நாள் “டேய், நேத்து டயர் மாத்துனேன், பழைய டயர்
பின்னாடி கிடக்கு. போய் எடுத்துக்கோ” என்றார் பெரியப்பா. மிகுந்த
ஆனந்தத்தில் டயரை எடுத்துக்கொண்டு குச்சியால் தட்ட, அது என்னை
முந்திக்கொண்டு ஓட, நான் அதை விரட்டி ஓடி மீண்டும் தட்ட, மீண்டும் முந்த
நான் பறப்பதாகவே உணர்ந்தேன். பந்தயத்தில் ஓட்டி ஓடி என் கால்கள்
ஓட்டப்போட்டிக்கு பழகியிருந்தது. ஆசிரியரின் ஊக்கத்தில் ஓட்டப்போட்டியில்
கலந்துகொண்டு இன்று உலக அளவில் சாதித்து பல மகிழுந்து
வாங்கியபோதும் வாயில் வந்த சத்தமும் கைகள் ஒட்டிய டயருமே என் ஆனந்த
மகிழுந்து.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
