எழுத்தாளர்: இரா.நா.வேல்விழி
அன்று ஆயுத பூஜை, வீடு முழுவதும் சுத்தம் செய்தாள் அம்மா.
மாலினி அந்த தையல் மிஷினை மட்டும் துடைச்சி பொட்டு வைச்சிடு, நான் கடைக்கு போயிட்டு வரேன் என்றவளிடம் சரிம்மா என்று மெஷினை துடைத்து பொட்டு வைத்தாள் மாலினி.
எங்க சாமி படங்களை காணோமே ,சரி அம்மா வந்தவுடன் கேட்கலாம் என்று காத்திருந்தாள்.
அம்மா வந்தவுடன் மாலினி பூ போடுமா சாமி கும்பிடலாம் என்றவளிடம் எங்கம்மா… சாமி படங்களையே வைக்கலையே என்றாள்.
கட்டியவன் விட்டுச் சென்றவுடன் கடவுளாய் நம்மை காப்பாற்றும் இயந்திரம் தானம்மா இறைவன் என்றாள்.
முட்டி வீங்கி முகவரியை தொலைத்தவள்.
முற்றும்.