எழுத்தாளர்: உஷாமுத்துராமன்
பிரியாவுக்கு திருமணமான நாளில் இருந்து பல ஊர்களில் இருந்தாலும் எல்லா இடத்திலும் அவள் தனி வீட்டிலேயே இருந்து விட்டாள். இதனால் அப்பார்ட்மெண்ட் என்று சொல்லப்படும் அடுக்குமாடி கட்டிடம் என்றாலே அவளுக்கு கொஞ்சம் பயம். அக்கம் பக்கம் இருப்பவர்கள் யார் என்றே தெரியாமல் ஏதோ ஒரு காட்டுக்குள் இருப்பது போல உணர்வாள். அதனாலேயே அப்பார்ட்மெண்ட் என்றால் பிடிக்காது. ஆனால் அவளுடைய கணவன் சிவா அப்பார்ட்மெண்ட் வாங்கி விட்டான். இதனால் குடியேற வேண்டிய கட்டாயம் ஆயிற்று. மூன்றாவது மாடிக்கு குடிபோன அவளை வீட்டுக்குள் குடி வந்த முதல் நாளே அவளுடைய அபார்ட்மெண்ட்டில் உள்ள எல்லோரும் வந்து உன் பெயர் என்ன எங்கே இருக்கிறாய் என்று அவளை விசாரித்து நட்பாக்கி கொண்டவுடன் இதுவும் பிடிச்சிருக்கு பரவாயில்ல இனி இங்கேயே நாம் சந்தோஷமாக வாழலாம் என்று தீர்மானித்தாள் பிரியா. எங்கு வாழ்ந்தாலும் நம் மனது தான் காரணம் என்று அப்பார்ட்மெண்டிலும் சந்தோஷமாக வாழலாம் என்று தன்னுடைய புதிய வாழ்க்கையை தொடங்கினாள் பிரியா.
நன்றி