எழுத்தாளர்: நா.பா.மீரா
ஞாயிற்றுக்கிழமை. நிதானமாய்த் தூங்கி எழுந்து ….சாப்பிட்டு ஆற அமர உட்கார்ந்தனர் ரவியும், சப்னாவும் .
நாளையிலேருந்து புது ஆபீஸ்….பதட்டமா இருக்கு ரவி . கொரோனா நம்ம வாழ்க்கையிலே எவ்வளவு விளையாடிடுச்சு இல்லே ….ரெண்டு பேருக்கும் வேலை போயி … அடுத்து சம்பளம் குறைவா வேலை கிடைச்சு … இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மீள ஆரம்பிச்சிருக்கோம் .
ஏய் சப்னா … நேத்து யூ டியுபில ஒருஆர்ட்டிகிள் படிச்சேன் … சிலந்தி வகை நண்டுகள் …ஜப்பானைச் சேர்ந்தவை .வருஷத்துக்கு ஒரு முறை தன் பழைய கடின ஓட்டிலிருந்து வெளியேறி ….புது ஓட்டுக்குள் புகுந்து கொள்ளுமாம் ….
வாழ்க்கையோட போக்கிலேயே போயி அனுபவிப்போம்டா… சொன்ன கணவனைக் கட்டிக் கொண்டாள் சப்னா
முற்றும்.