எழுத்தாளர்: அ. கௌரி சங்கர்
இரவு மணி பன்னிரண்டு. திரையரங்கத்தில் இருந்து வெளியே வந்தான் விக்னேஷ். எட்டு மணிக்கே இரு சக்கர வாகனத்தை பார்க் செய்யும்போது அவனுக்கு தெரிந்தது – பெட்ரோல் காலியாகிக்கொண்டு இருக்கிறது என்று. வீட்டிற்கு பத்து கிலோமீட்டர் தூரம் சென்றாகவேண்டும். நிச்சயம் வாகனம் உதவாது. வெளியில் எடுத்து வழியில் உள்ள பங்கில் பெட்ரோல் நிரப்பிக்கொள்ளவேண்டும். இந்த நேரத்தில் அப்படி பங்குகள் அருகில்
இருப்பதாக தெரியவில்லை.
தன்னை தானே நொந்துகொண்ட விக்னேஷ் கண்ணில் பட்டது. ஒரு புதிய இருசக்கரவாகனம். வாகனத்திற்கு சொந்தக்காரர் சாவியை வண்டியிலேயே விட்டு விட்டு சென்று இருக்கிறார். ஒரு வினாடி மனம் தள்ளாடியது- வண்டியை கொண்டு சென்று விடலாமா என்று. அதற்குள் வேக வேகமாக வண்டிக்கு சொந்தக்காரர் வண்டியின் அருகில் வர, விக்னேஷ் சாவியை அவரிடம் தந்தான். நன்றியுடன் அவனை பார்த்தவர் பெட்ரோல் இல்லாமல் அவன் தவிப்பதை நொடிகளில் தெரிந்துகொண்டு, ஒரு தண்ணீர் பாட்டிலில்
அவருடைய வண்டியில் இருந்து பெட்ரோலை தருவித்து, அவனிடம் தர, சில நொடிகளில் இருவரும் கை குலுக்கிக்கொண்டு தங்களுடைய இரு சக்கர வாகனங்களில் அவரவர் வீடுகளை நோக்கி பயணப்பட்டனர்..
முற்றும்.