10 வரி போட்டிக் கதை: எதுவாகிலும் நிலத்தடி நீரே

by admin
71 views

எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்

“எங்க பாத்தாலும் ட்ராபிக், தூசி. ஊராட இது. எங்க ஊர்ல வருசம் முழுக்க
அருவில தண்ணி வரும். அதுல குளிச்சுட்டு இங்க போர் தண்ணில
குளிச்சிக்கணும்னு தல எழுத்து” என்று சென்னை வந்திருந்த செல்வம்
பொலம்பிக்கொண்டிருந்தான். “டேய் பொங்கல் லீவுக்கு ஊருக்கு போகாம
சென்னைல இருந்து பார். கோயம்பேட்டுல இருந்து தாம்பரம் வர காலியா
சுத்தமா இருக்கும். தமிழ் நாட்டு மக்கள் தொகைல பத்துல இருந்து பதினஞ்சு
சதவீத ஆளுக ஒரே ஊர்ல இருந்தா நாரத்தன் செய்யும். ஓன்னு மட்டும்
புரிஞ்சுக்கோ, போர் தண்ணியா இருந்தாலும், மலை உச்சில இருந்து வர்ற
தண்ணியா இருந்தாலும் ரெண்டுமே நிலத்தடி நீரே. இங்க தண்ணி வேணா
பிரச்சனையா இருக்கலாம். ஆனா நம்பி வர்றவங்களுக்கு சோறு போடுற
ஊர் இது. சும்மா பெரும பேசாம பொழப்ப பாரு” என்றான் உடன் இருக்கும்
நண்பன் முத்து.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!