எழுத்தாளர்: நா.பா.மீரா
மிதிலா ஆயத்த ஆடையகம் …. ஷிப்ட் முறையில் பெண்களைப் பணிக்கு அமர்த்தி … ஓய்வே இல்லாமல் தையல் இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்க .. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கான ஆடைகள் ஏற்றுமதிக்குத் தயாராகிக் கொண்டிருந்தன.
ஊம் … இவங்களாவது கொஞ்ச நேரமாவது ஓய்வேடுக்கிறாங்க … நமக்குத்தான் 24/7 நேரமும் வேலை. ரிப்பேர் கூட உடனே சரி பண்ணிடறாங்க …. ஏக்கப் பெருமூச்சுவிட்டன அந்த இயந்திரங்கள் .
அன்று … வேலை பார்க்கும் பெண்களைவிட்டு மெஷின்களுக்கு சந்தனம் , குங்குமம் வைத்தாள் மிதிலா.
என்னடா நம்ம மேல எந்த கால்களுமே பதியல …யாரையுமே காணோமே ?
அன்று ஆயுதபூஜை என்று அவற்றிக்குத் தெரியுமா என்ன?
முற்றும்.