10 வரி போட்டிக் கதை: ஒரு  நாள்  சந்திப்பு

by admin 1
59 views

எழுத்தாளர்: விஜயா  சுப்ரமணியம்

அது ஒரு பெரிய நஷத்திர ஓட்டல், புது வருஷ கோலாகலம் நிறைய
போட்டிகள், ஆறாவது மாடியில் இருந்து இறங்கி வருகிறான் ரஞ்சித் ஆறடி
உயரம், பாடிபில்டர்,,ஒரு கை புஜத்தில் கழுகை பச்சை குத்தி இருக்கிறான்,
அவன் கைகள் ஆட்டும் பொழது கழகும் கூட பறக்கிறது,
எதிரே ஷிப்பான்,ஸாரி, பாப்கட் தலை, முகத்தில் விழும் மயில்கற்றையை
அழகாக தலையசைவில் தள்ளும் லாகவம்,,நல்ல உயரம், ஒரு கம்பீரம் ,இருக்கிறது,
எதிரே வந்த ரஞ்சித்தை பார்க்கிறாள் ” நீ என்கூட காலேஜில் படித்த ரஞ்சித்
இல்லை? , ஆமாம் நீ ராகினி இல்லை?
இருவரும் சேர்ந்து படித்தவர்கள் காதல் வயப்பட்டவர்கள், பெற்றோருக்கு
இஷ்டமில்லாததால் பிரிந்தவர்கள், ராகினியோட கணவன் ஒரு விஞ்ஞானி,
எப்பொழுதும் அதிலேயே மூழ்கி இருப்பான், மனைவி ஒருத்தி வீட்டீல்
இருப்பதையே மறந்தவர்கள், ரஞ்சித்தின் மனைவியும் லேடீஸ், க்ளப் அது இது
என்று சுற்றுபவள், ரஞ்சித்தோ அமைதியை விரும்புபவன்

இருவரும் பழைய நாட்களை, நினைத்து பார்க்கிறார்கள், இருவர் குடும்பமும்
நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள், இவரகள் , ஒரு சிறு நவறும் இருவர்
குடும்பத்தையும், அழித்து விடும்,
இந்த ஒரு நாள் மட்டும் வாழ்க்கையை நன்றாக அனுபவிப்போம்,
நாளை பிரிந்து விடுவோம், போன், நம்பர் ,கூட வாங்கக் கூடாது ,இருவரும்
சேரந்து சாப்பிடுகிறார்கள், நிறைய போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள், நிறைய
போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள,
கடைசியில் பெஸ்ட் கப்பிள்” போட்டி, இருவரும் பங்கு எடுத்து
கொள்கிறார்கள், கடைசியில், பெஸ்ட் கப்பிள் என்ற டைட்லும் கிடைக்கிறது,

நிறைய போட்டோ எடுக்கிறார்கள், எல்லாத்திலேயும் தோள் “மேல் கை போட்டு
கொண்டு அழகாக போஸ கொடுக்கிறார்கள்,
தாங்கள் வந்ததும் மீட் பண்ணினதும் யாருக்கும் தெரியக் கூடாது தெரிந்தால்
குடும்பத்தில் குழப்பம் உண்டாகும், இருவர் பெயரும் கெடும்
சந்தோஷமாக இருவரும் கிளம்புகிறார்கள், மறுநாள் செய்தி தாள்களில்
இருவருடைய தோள்மேல், கை போட்டு கொண்ட போட்டோ வருகிறது, அந்த
கருட ,பச்சை டாட்டுவும் , நன்றாக தெரிகிறது.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!