எழுத்தாளர்: ஹரிஹர சுப்பிரமணியன்
எங்கெங்கு காணினும் சக்தியடா என பாடிய பாரதி இன்று இருந்தால்
எங்கெங்கு காணினும் ஓநாய்களடா என உரத்த குரலில் பாடி இருப்பார்,
கடமையை செய்யவே லஞ்சம் என்பது இன்று எழுத படாத சட்டம் ஆகி விட்டது .
ராம சந்திரன் அரசு பதவியில் இருந்து சமீபத்தில் தான் ஒய்வு பெற்று அவரது பனி
கொடை, மற்றும் இதர நிலுவை தொகைகளை பெற ஒரு வார காலமாக அவர் பணி புரிந்த
அலுவலகத்திற்கு நடையாய் நடந்து சலித்து போனார் ,
எல்லா டாக்குமெண்ட்களும் சரி வர சமர்ப்பித்தும் ஒரு காரியமும் நடக்க வில்லையே என
வருத்தத்துடன் அந்த அலுவலக வாயில் மரத்தடியில் இளைப்பாறும்போது அலுவலக
அறையினுள் அவரது கோப்பை பார்க்கும் அதிகாரியுடன் உதவியாளர் பேசியது செவிக்குள்
சூடு வெண்ணீரை ஊற்றியது போல இருந்தது .
” இந்த ஆளு பதவியில் இருந்த போது எப்படியெல்லாம் காசு வாங்கினார் ?? இப்ப
அவர்க்கு மட்டும் எப்படி சும்மா கிடைக்கும் ?? காசு தந்தால் தான் இனி அடுத்த வேலை ,
நாளைக்கு வந்தால் உறுதியாக சொல்லிடு ” என அதிகாரி உத்தரவு போட்டதை கேட்டு ஒரு
நிமிடம் ஆடி போனார் ,
வேறு வழி இல்லை , காசை கொடுத்துவிட வேண்டி யதுதான் என முடிவெடுத்து தான்
விதியை எண்ணி நொந்து போனார் ,
முக கண்ணாடியில் அவரது முகத்தை பார்த்த போது அங்கு ஓநாய் உருவம் தெரிந்தது
நன்றி
