எழுத்தாளர்: ரங்கராஜன்
புதிதாக திருமணமான தம்பதியர் ரவி, மேகலா, இருவரும் அரசுப்பணியாளர்கள். திருமணமான புதிதில் ரொம்ப சந்தோஷமாக இருந்தனர். ஞாயிறு மாலை டிவியில் சினிமா பார்த்து விட்டு, மேகலா, தோசை சுட்டுக்கொடுக்க முடிவு செய்து, அடுப்பில் கல்லைப் போட்டு, முதல் மாவு, தோசைக்கல்லை விட்டு வர மாட்டேன் என்றது.
ரவிக்கு ரொம்ப பசி, மேகலாவுக்கும் பசிதான். என்ன செய்வது தோசை மாவை இட்லியாக மாற்றலாம் ஆனால் பசி அதுவரை தாங்காது, ரவி உடனே பக்கத்த்தில் உள்ள பேக்கரிசென்று பிரட்வாங்கி டோஸ்ட் செய்து கொடுத்து விட இருவரும் சாப்பிட்டுதூங்கினர்.
மறுநாள் மேகலா வேலை செய்யும் அலுவலகத்திற்கு வந்த ரவி, இருவரும் கண்காட்சிக்குச்
சென்றனர். அங்கே ஸ்டால் பார்த்தபடி சென்ற சமயத்தில் ஒருஸ்டாலில் நான்ஸ்டிக் பிராண்டட் விற்பனை ஓன்று வாங்கினால் ஒன்று இலவசம், அதை வாங்கி ரவி மனைவியிடம் கொடுத்து, உன் பிறந்த நாள் பரிசு என்று சொல்லி அசத்தினான்.
முற்றும்.