எழுத்தாளர்: ஆ. சந்திரவதனா
உடலில் அடித்து போட்டது மாதிரியான வலி எனில் மனதிலோ அதைவிட வலிவேதனை. குடிகார சந்தேக புருஷனிடம் அடிபட்டு மிதிபட்டு வெளியே தெரியாமல் சின்னத்திரை நடிகை என்ற கௌரவமான பெயருடன் வாழ்ந்து வருகிறாள் வைஷ்ணவி.
இன்று ஒன்பது மணிக்கு ஷூட்டிங் போயாக வேண்டும். அழுது வீங்கிய கண்களுக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்து வேகமாக கிளம்பி கணவனின் கேள்வியை பொருட்படுத்தாமல் இன்று ஏதாவது ஒரு நல்ல காட்சியில் நடித்தால் மனக்கவலை மாறிவிடும் என்ற நம்பிக்கையுடன் சென்றாள்.
அசிஸ்டன்ட் டைரக்டர் அவளை அழைத்து அக்கா இன்னைக்கு உங்க கண்ணுக்கு மட்டும் தான் மேக்கப் . க்ளோசப் ஷாட். கண்ணை சுத்தி பனித்துளிகள் நிற்கிற மாதிரி உங்கள் கண்ணீர் துளிகள் தெரிய வேண்டும். மனசுக்குள்ள இருக்க வலி அந்த கண்ணுல தெரியனும். கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த காட்சியை நடிச்சு குடுங்க அக்கா என்றார்.
நடிப்பில் கூட எனக்கு சிரிப்பு கிடையாதா என்று நினைத்து சிரித்துக் கொண்டாள் .அவள் கண் பேசிய வலி நடிப்பல்ல உண்மை.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
