எழுத்தாளர்: மு.லதா
அப்பா,அப்பா அது என்னப்பா ரொம்ப அழகா
இருக்கு என்று ஒரு மழைநாளில் தந்தையுடன் கடைக்குச் சென்ற புவனா வினவ,அவரோ
அதுதான்டா குட்டி ‘நாய்க்குடை’ என்றார்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் புவனாவுக்குப் புரியாமல்,நாயோடகுடையாப்பா!
இத்துனூண்டு குடைக்குள்ள எப்படிப்பா நனையாம இருக்கும்என்றாள்
ஆச்சரியத்துடன்.
அவளது மழலையை ரசித்துச் சிரித்துக்கொண்டே,
இல்லடா தங்கம்,இது ஒரு வகைத்தாவரம்-மழை பெஞ்சா முளைக்கும்.
அப்பா,இது ரொம்ப அழகா இருக்குல்ல,ஒரு
ஃபோட்டோ எடுத்துக் கொடுப்பா…என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட
காண்பிக்கப்போறேன்…இந்த வார்த்தைகள் அவரது பழைய நினைவுகளைத் தூண்டவே
அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த அவரது
புகைப்படக்கலைஞராகும் கனவு மீண்டும்
தலைதூக்கியது.
தனது திறமையை முழுவதும் உபயோகித்து,மிக அழகாகப் புகைப்படம்
எடுத்தார்.
சில நாட்கள் கழித்து ஆனந்தவிகடனை எடுத்துக்கொண்டு ஓடிவந்த சிவகாமி,ஏங்க
உங்க புகைப்படத்துக்கு முதல் பரிசு கிடச்சிருக்கு,இங்க பாருங்களேன் என்றாள்.
விகடன் புகைப்படப் போட்டிக்கு,மகளுடன்
மழைநாளில் ரசித்து எடுத்த புகைப்படத்தை
அனுப்பிவைக்கும் ஆவலுக்கு வித்திட்ட மகளை அணைத்து முத்தமிட்ட புகைப்பட
கலைஞன் மீண்டும் தன் கனவுகளை புது
உத்வேகத்துடன் துரத்தத் துவங்கிவிட்டான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
