10 வரி போட்டிக் கதை: கழிவறை

by admin 1
57 views

எழுத்தாளர்: நா.பத்மாவதி

1. “அப்பா அந்த வீடு வேண்டாம்பா” என்றான் முகில்

2. “ஏண்டா அப்படி சொல்றே, வீடு நல்லாதானே இருக்கு, அவன் கிடக்கான் சின்னப் பையன், நாம அந்த வீட்டையே முடிச்சுடுவோம்”  கணவனிடம் சொன்னாள் லதா.

3. ” இரு அவன் ஏன் வேணாம்னு  சொல்றான்னு கேப்போம்” என்றவர் மகனிடம் ” ஏம்பா வேணாம்” என வாஞ்சையோடு கேட்டார்.

4. “அப்பா அந்த வீட்ல டாய்லட் பாத்தியா வெஸ்டன் ல இருக்கு, அதுல இருந்தா எனக்கு வராது” எனக் கூறி வெட்கினான் முகில்.

5. ” இதான் உன் பிரச்சனையா” என இருவரும் சிரிக்க,                     ” சிரிக்காதீங்க ரெண்டு பேரும் அதால மட்டுமில்ல,  அது ஆரோக்கியத்துக்கும் நல்லதில்ல” என அக்கறையோடு சொல்லும் பிள்ளையை ஆச்சர்யமாக பார்த்தனர்.

6. “இங்கபாரு முகில், நீ ஒண்ணும் குழந்த இல்ல 9ம் க்ளாஸ் படிக்கற, சொன்னா புரிஞ்சுகற வயசாச்சு, இனி மழைக்காலம், நாம கீழ் போர்ஷன்ல இருக்கோம் பாத்ரூம்ல சாக்கடையும் ஒண்ணாகி பூச்சி,பூரான் னு வந்து கஷ்டமாயிடும் பாத்துக்கோ” என்றாள் அம்மா

7. அப்பா அவனை அருகில் அழைத்து “மேலும் கண்ணா  தாத்தாவால கீழே உக்காந்து எழறது சிரமம்,எங்களுக்கும் முட்டிவலி வந்தாச்சு, நீ சொல்றாப் போல ஆரோக்கியத்துக்கு நல்லதில்லைதான், ஆனா யதார்த்தத்தையும் யோசிக்கணும் கண்ணா, சரி யோசிச்சு சொல்லு, நீ வேணாம்னா வேண்டாம் ஒகே வா போ போய் நிம்மதியா தூங்கு” என்றார்.

8. “என்னங்க அவன் வேணாம்னா வேண்டாம்னு சொல்றீங்க, அவனுக்கு சொல்லி கூட்டி போறத விட்டு”  என்ற லதாவிடம் “புலம்பாத போய் படு அவன் காலைல சரினு சொல்லுவான்னு நம்பு,” என்றபடி  நகர்ந்தவரை என்ன சொல்றார் என நினைத்தபடி பார்த்தாள் லதா.

9. இரவெல்லாம் யோசித்தபடி படுத்தவனுக்கு கனவில் விதவிதமான நிறங்களில் பல வடிவங்களில் வெஸ்டர்ன் டாய்லட்கள் “என்னை ஏன் வேண்டாம் என்கிறாய்” என சுற்றி சுற்றி வந்தன.

10. மறுநாள் பொழுது விடிய கழிவறையில் அமர்ந்தவனுக்கு முதல்நாள் அப்பா சொன்ன யதார்த்தமும், அவனை சுற்றி வந்த கனவும்  தாத்தா, அப்பா, அம்மாவுக்காக நாம அந்த வீட்டுக்கே போகலாம்னு திடீர் ஞானதோயம் தோன்ற வெளியில் வந்ததும் “அந்த வீட்டுக்கே போலாம்பா” முகில் சொல்ல , கணவனின் கணிப்பை மனதார பாராட்டினாள் லதா.

முற்றும்.

10 வரி கதை போட்டியில் கலந்துக்  கொண்டு வெற்றி பெறுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!