எழுத்தாளர்: வாசவி சாமிநாதன்
ஆர்வத்துடன் புதுமனையை சுற்றிப்
பார்த்த ஹேமா, கழிவறை கதவை திறந்து பார்த்தாள்
அவளது நினைவு மறந்து நிழல்கள்
தோன்ற ஆரம்பித்தது.
“கல்யாணம் முடிஞ்சி இத்தனை நாட்களாகுது புள்ளப் பூச்சி
ஒன்னத்தையும் காணம்” கேள்விக்கணைகள் தொடுத்த வண்ணம் இருப்பர்
ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து பார்த்து துவண்டு போகும் போது தெல்லாம் கழிவறைக்கு சென்று
கதவு சாத்தி கண்ணீரால் கழுவிய பிறகே வெளியேறுவாள் கவலையை விட்டு
முடிவு எடுக்க முடியாமல் திணறும் போதெல்லாம் கழிவறையில் அமரும்
போது தான் விடை கிடைக்கும் குழாயிலிருந்து வெளியேறிய நீரை காட்டிலும் அவளது கண்களிலிருந்து வெளியேறியதே அதிகம் கவலையை கேட்டு கணத்த கழிவறையே கடவுளிடம் வேண்டிக்கொண்டது
போல அவளுக்கு பிள்ளை வரமும் கிடைத்துவிட்டது.
இன்றும் கவலையை மறக்கும் இடம் கழிவறையே!
யாரோ கூப்பிடும் குரல் கேட்டு சட்டென்று நிஜ உலகிற்கு வந்த ஹேமா ,
கழிவறையை பார்த்தாள் !
கழிவறை ஹேமாவைப் பார்த்து
சிரித்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
