எழுத்தாளர்: மிதிலா மகாதேவ்
அன்று எனக்கு ஆபிஸ்சில் ஒரு farewell part இருந்தது. எங்க மேனேஜர் ரிட்டயர் ஆக போவதால் நிர்வாகம் இதை ஏற்பாடு செய்து இருந்தது.
நான் கிளம்பி கொண்டு இருக்கும் போது அப்பா என அழைத்து கொண்டு ஏழு வயதான என் பெண்ணு வந்தாள். “என்ன பாப்பா ஸ்கூல் கிளம்பி விட்டாயா கொஞ்சம் இரு அப்பா பேக் எடுத்து வருகிறேன்” என்றேன்.
“அப்பா சாயங்காலம் சீக்கிரமாக வா நம்ம ஹோட்டல் போக வேணும்” என நினைவுபடுத்தினாள் .உண்மையில் மறந்து போன நான் “எதற்கு மா” என என் பெண்ணு கமலியிடம் கேட்டேன்.
“என்ன பா மறந்து விட்டாயா நீ தானே சொன்ன நான் கிளாஸ் பர்ஸ்ட் வந்தால் நான் கேட்ட ஸ்வீட் வாங்கி தருவதாக” என்றாள்.
“ஓ அதுவா தங்கம் அப்பா இன்று முக்கியமான வேலை இருக்கு வர முடியாது நாளை போகலாம்” என சொன்னேன்.
அவள் முகம் மாறி அழுகைக்கு போக அழ தொடங்க… என் மனைவி மாலா வந்தாள் விஷயத்தை தெரிந்து கொண்டவள்.
“இதுவா விஷயம் ஏய் நாளை போகலாம் டி அப்பாவுக்கு இன்று முக்கிய வேலை இருக்கு. அது என்ன ஓடியா போகும் கிளம்பு என்னங்க இவள் இப்படி தான் நீங்க கிளம்புங்க” என சொல்ல நான் கமலியை அழைத்து கொண்டு கிளம்பினேன்.
பைக்கில் வரும் போது கூட என் கூட பேசி கொண்டு வருபவள் அமைதியாக வர அவள் கோபம் புரிந்தது. சரி வந்து அவளை சமாதானப்படுத்தலாம் என நினைத்து அவளை ஸ்கூலில் இறக்கி விட்டு போனேன்.
நான் ஆபிஸ் வர பார்ட்டி ஏற்பாடு எல்லாம் நடந்து கொண்டு இருந்தது ஆபிஸ் முடிய பார்ட்டி ஆரம்பித்தது. மேனேஜரை பாராட்டி பேசி அவருக்கு கிப்ட் கொடுத்த பிறகு விருந்து அதில் பரிமாறிய ஸ்வீட்டை என்னால் சாப்பிட முடியவில்லை காரணம் என் மகளுக்கு பிடித்த அவள் ஆசையாக கேட்ட காஜு கத்லி ஸ்வீட்.
அவள் நினைவு வர அதை அவளுக்காக எடுத்து வைத்தேன் வைர வடிவில் இருக்கும் ஸ்வீட் அது… பார்ட்டி முடிய அவள் தூங்க போக முன் இதை கொடுக்க வேணும் என வீட்டுக்கு விரைந்தேன்.
முற்றும்.