எழுத்தாளர்: மு.ஜாபர் சாதிக் அலி
அந்திமாலை நேரம்… கடற்கரையில் தனியாக நின்றிருந்தாள் மாதவி.என்னதான் கோபித்துக் கொண்டு போனாலும் தனித்து விட்டு போயிருக்க வேண்டியதில்லை கோவலன்.பிரச்சனை ஒன்றுமில்லை.கல்யாணத்திற்கு முன் இருவரும் சந்தித்து பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி பெற்றோர்கள் அனுப்பி வைக்க, இருவரும் பேசிய பத்து நிமிடங்களில் இவளுடன் வாழ முடியாது என்று உறுதியுடன் முடிவெடுத்தான் கோவலன்.’இது ஒத்து வராதுங்க…என்னால நீங்க சொல்ற மாதிரி குடும்பத்தோட சேர்ந்து இருக்க முடியாது.தனிக்குடித்தனம்தான் பெஸ்ட்.. நீங்க வேற ஆளைப் பாருங்க…’ என்று சொல்லி கிளம்பி விட்டான் கோவலன்.இந்த காலத்துலயும் இப்படி ஒருத்தியா என்று சொல்லிக் கொண்டே நடந்தவனைப் பார்த்து திகைத்து நின்றாள் குடும்ப விளக்கு மாதவி.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
