எழுத்தாளர்: சி.சினேகா
பத்தாம் வகுப்பு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது .ஆருத் முடிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான் . அவன் கணித பாடத்தில் 2 மதிப்பெண் குறைவாய் பெற்று தோல்வி அடைந்தான். துயரத்தில் தற்கொலை செய்து கொள்ள தண்டவாளங்களுக்கு சென்றான். அந்த தண்டவாளத்தில் அழகாய் பூத்திருந்த சிறிய பூ புத்துணர்ச்சியுடன் அழகாய் சிரித்ததை போல இருந்தது. ரயில் வரும் அதிர்வில் பூ தன்னைக் காப்பாற்ற சொல்லி அவனிடம் கெஞ்சியது போல இருந்தது. ஆருத் ரயில் அருகில் வர, பூவை பறித்துக் கொண்டு தண்டவாளங்களை விட்டு நகர்ந்தான். பூவை அருகில் இருக்கும் கோவிலில் வைத்துவிட்டு ‘ஒரு நாள் வாழ்விற்காக நீயே இவ்வளவு பாடு படும்போது நான் ஏன் மறு தேர்விற்கு தயாராக கூடாது’ என்று நினைத்துக் கொண்டு சென்றான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
