10 வரி போட்டிக் கதை: சாட்டையடி 

by admin 1
23 views

மேடம்… சத்தியமா நா திருடல .. நம்புங்க ….

உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு ? இப்போ போலீஸ் வருவாங்க …. அவங்க உன்னை உண்மையக் கக்க வச்சிருவாங்க ….

காலிங்பெல்  ஒலிக்கக் கதவைத் திறக்கிறாள் . 

இங்கே விலாசினிங்கிறது —-

நான்தான் சார்—கார்பென்ட்ரி வேலைக்காக வந்த இந்த ராஸ்கல் …என்னோட ஏழு பவுன் செயினைத் திருடிட்டான் இன்ஸ்பெக்டர் —–

இடுப்பு பெல்ட்டைக் கழட்டி விளாசு விளாசென்று விளாச —-அவன் கிட்டத்தட்ட மூர்ச்சையானான் .

கையில் ஒரு செயினுடன் அங்கே வந்த விலாசினி — தொந்திரவுக்கு மன்னிக்கணும் இன்ஸ்பெக்டர் — இது இன்னொரு பீரோவில இருந்தது ….

கொஞ்சம் தண்ணீர் கொடுத்து அவனை ஆசுவாசப்படுத்தினார் இன்ஸ்பெக்டர். 

இந்தாப்பா மூவாயிரம் ருபாய்.. பேசினத விட ஆயிரம் அதிகம் கொடுத்திருக்கேன் ——

அவளைப் புழுவை விடக் கேவலமாகப் பார்த்துவிட்டு அவன் நகர— இன்ஸ்பெக்டர் வீசிய கண்டனப் பார்வையில் சாட்டையடி வாங்கினாள் விலாசினி. 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!