10 வரி போட்டிக் கதை: சுய தொழில்

by admin 2
57 views

செல்வியின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்து விட அவள் பாட்டி தான் அவளை வளர்த்து பள்ளிக்கு அனுப்பினார். ஆனால் அவள் 12 ஆம் வகுப்பில் தோல்வியுற்றதால்  மேற் கொண்டு படிக்க விரும்பாமல் ஏதேனும் வீட்டு வேலை செய்வதற்காக அருகில் இருக்கும் அடுக்குமாடியில்  குடியிருப்பில் வசிக்கும் சீதா வீட்டில் வேலை செய்ய தொடங்கினாள். செல்வி சீதாவிடம் “அம்மா எனக்கு உங்களிடம் இருக்கும் பழைய புடவைகள் இருந்தால் கொடுங்கள்”  என்று கேட்டதற்கு “எதற்கு?”  என்று கேட்டாள். எனக்கு அரசாங்கத்தில் தையல் மெஷின் கொடுத்திருக்கிறார்கள் நான் அதை வைத்து தைக்கப் போகிறேன். என் பாட்டியின் புடவைகளில் கால்மிதி செய்து பார்த்தேன் நன்றாக வந்தது  உங்களுடைய பழைய புடவைகளை  கால் மீதிகளாக தைத்து விற்பனை செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்”. அவளுடைய சுயதொழில் செய்யும் முயற்சியை பாராட்டிய சீதா அவளுக்கு தன்னுடைய பழைய புடவைகளை கொடுத்துவிட்டு “எனக்கு ஐந்து கால்மிதி வேணும் ஆர்டர் எடுத்துக்கொள்” என்று சொல்ல, “உங்களுக்கு இலவசமாகவே தருவேன்” என்று செல்வி சொன்னதற்கு  ” நீ தைத்ததற்கு நான் கூலி கொடுத்து தான் உன்னிடம் இருந்து என் கால் மிதிகளை வாங்கிக் கொள்வேன்” என்று அவளிடம் தன்னுடைய பழைய புடவைகளை கொடுத்தாள் சீதா.

நன்றி  

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16298-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!