எழுத்தாளர்: அனுஷாடேவிட்
இரவு நேரம். அந்த ஆய்வு கூடத்தின் ஒரு பகுதி முழுவதும் பல விலங்குகள் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. அவைகளின் கண்களில் அச்சம் அடுத்த என்ன நடக்குமோ என்று.
மறுபக்கம் விதவிதமான ஆய்வு குடுவைகளும் மருந்துகளும் ஒரு பெரிய கண்ணாடி கூண்டும் இருந்தது. அதன் உள்ளே ஒரு வெள்ளை நாய் பவ்யமாக படுத்திருந்தது.
இரும்பு கதவை திறந்து உள்ளே வந்த விஞ்ஞானி சைத்ரன் தேவ் அவனது உதவியாளனுடன் உள் நுழைந்தான். உலகத்தின் பார்வை தன் மீது விழ வேண்டும் என்ற ஆர்வத்தில் விலங்குகளை துன்புறுத்தி ஆராய்ச்சியில் ஈடுபடுபவன்.
வந்தவன் தான் கொண்டு வந்திருந்த மரபணு சிரத்தையும் பொட்டாசியம் மற்றும் பொட்டாசியம் புரோமைடு சிரமையும் ஏற்கனவே இருந்த குடுவையிலுள்ள மருந்துடன் கலந்தவன் அதை விலங்குக்கு செலுத்தும் ஊசியில் ஏற்றி தன் கண்களுக்கு நேராக கொண்டு வந்து பார்த்து கோணல் சிரிப்பை உதிர்த்தான்.
செந்நிற ஓநாயை மீண்டும் பெரும் இனமாக மாற்றவும் தன் நாட்டில் அதனை பரவ விடவும் ஆவல் கொண்டு அதனின் மரபணுவை மாற்றம் செய்து இதுவரை 88 நாய்களை காவு வாங்கியவன். இன்னும் முழுமையான ரிசல்ட் கிடைக்கவில்லை. சைத்ரனும் தன் முயற்சியை கைவிடவில்லை.
கண்ணாடி கூண்டினை திறந்தவன் வெள்ளை நாயின் முதுகினை மெல்ல தடவியவன் அதன் வயிற்றை சுற்றி பெல்ட்டினை மாட்டினான். பின் அதன் கழுத்தில் ஊசியை செலுத்தினான்.
செலுத்திய நொடியில் அதன் கை கால்கள் விரைத்தன. விழி நரம்புகளும் புடைத்தன. துடித்து உடலை அசைத்து பார்த்தது. வயிற்றை சுற்றி வளைத்திருந்த பெல்ட் அறுந்து உடல் தூக்கி போட்ட நொடி மயங்கியிருந்தது. அதன் செய்கைகளை புன்முறுவலுடன் பார்த்திருந்த சைத்ரன் கணிணியில் அமர்ந்து இதுவரை செய்தவற்றின் அட்டவணைகளை பார்த்து கொண்டிருந்தான்.
மணித்துளிகள் கடந்து செல்ல கண்ணாடி கூண்டில் சோர்ந்து மயங்கிய வெண் நாயின் விழிகள் படக்கென்று விழி மலர்த்தின. அடர் சிவப்பு நிறத்தில் விழிகள் ஜொலித்தன அந்த இரவில்.
ரோமங்கள் வான் நோக்கி குத்திட்டு நின்றன செந்நிறமாக மாறி. கால்களின் விரல் நகங்கள் பெரிதாக மாறி கூர்மையுடன் வளைந்தன. உடல் முறுக்கேறி பலம் வாய்ந்த வலிமையை பெற்றன.
எழுந்து நின்றதும் கண்ணாடி கூண்டு சுக்கல் நூறாக உடைந்து தெறித்தது. சத்தம் கேட்டு திரும்பி பார்த்த சைத்ரனும் அது நின்ற தோரணையில் அதிர்ந்து குருதி உறைய நின்றான். குதித்து பாய்ந்து வந்த அதன் விழிகளில் குருதி குடிக்கும் வெறி.
முற்றும்.
