எழுத்தாளர்: உஷாராணி
முன்பதிவு செய்திருந்தும் கூட்ட நெரிசலில் அவனையும் அவனைப்போல் பலரையும்
ப்ளாட்ஃபாரத்தில் தவற விட்டு விட்டு டிக்கெட்டே வாங்காதவர்களை ஏற்றிக்கொண்டு
போயே போய் விட்டது இரயில். நாளை மறுநாள் திருநெல்வேலியில் வேலைக்குச் சேர
வேண்டும். இதோடு நாளை காலை எட்டு மணிக்குத்தான் அடுத்த வண்டி. இணைப்பு
வண்டிக்காகச் சென்னையில் வந்து இறங்கியிருந்தான். முதல் மாத சம்பளம் பற்றி மூன்று
மாதமாகக் கனவில் இருந்தான். ஊரில் பத்து பேர் கொண்ட குடும்பத்தின் இருபது
தேவைகளை அவன் மீது ஏற்றி அனுப்பியிருந்தார்கள். குடும்பத்திலேயே முதல் அரசாங்க
உத்யோகம் வேறு. ஸ்டேஷனில் ஒரு புகார் எழுதிக்கொடுத்து விட்டு சாப்பிடக் கிளம்பினான்.
அதிகாலை வரை நடைபாதையில் படுத்துறங்கினான். ஏதோ ஒரு அதிகார வர்க்கத்தின்
அதிகாலை போதை செழிப்பான காரில் விரைந்து வந்தது. அவன் மீது ஏற்றி விட்டு டயர்களை
சிவப்பாக்கிக்கொண்டு சினந்து சென்றது. அதிகாலையில் போதை இருக்கலாம். ஆனால்
உறக்கம்.. அதுவும் இவனுக்கெல்லாம்??
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
