எழுத்தாளர்: புனிதா பார்த்திபன்
அவனுக்கு பட்டாம்பூச்சி பிடிக்க ஓடியபோது துளிர்த்த கனவிது. “அந்த விமானத்துல போனா
பட்டாம்பூச்சி மாதிரி பறக்கலாம்ல” என வானத்தைப் பார்த்து சிலிர்த்துக் கொள்வான்.
“இத்தூணூண்டா இருக்கு இதுல எப்படி மனுசங்க போறாங்க!” என வியப்பான்.
தூக்கத்திலும், சத்தம் கேட்டவுடன் ஓடிச்சென்று ஏக்கமாய் வானைப் பார்ப்பான்.
சிறுவயது கடந்து இளைஞனான போது விமானக் கட்டணத்தை விசாரித்து விழிகள் விரிந்து
போனான்.
இல்லாதவன் வீட்டுப் பிள்ளைக்கு இல்லாத ஆசை எதற்கெனத் தள்ள நினைத்தாலும், ஒரு முறை,
ஒரே ஒருமுறை என மனம் ஏங்கியது.
காலம் கனிந்தது, முதல் மாதச் சம்பளம் கொஞ்சமாய் கையில் தவழ, செலவுகள் அனைத்தையும்
புறம்தள்ளி ஒரு விமானச் சீட்டு எடுத்தான்.
ஏக்கத்தைக் கலைத்து கனவை நிறைவேற்றிட, பயண நாளும் வந்தது. இன்றும் நிமிர்ந்து
பார்த்தான். ஆசையாய் கையசைத்து விமானத்துக்குள் ஏறிய அவன் தாயின் சுருங்கிய கண்களில்
துளிர்த்த ஈரத்துக்குள், அவன் ஆசை பேரன்புடன் நிறைவேறியிருந்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
