எழுத்தாளர்: நா.பா.மீரா
அப்பா …எங்க கம்பெனில இந்த வருஷம் ஆண்டு விழாவில …எங்க எம்.டி. பாமிலி ட்ரெடிஷனல் காஸ்ட்யூம் காம்படீஷன் ஏற்பாடு பண்ணியிருக்கார் .
அதுவும் ஸ்பாட்ல ஒரு ரூம் தந்து …. அவங்க குடுக்கிற டைமுக்குள்ள, பாரம்பரிய உடை அணிந்து வந்து நிக்கணுமாம் …..
ஒரு லட்ச ரூபாய் பரிசுப்பா … லலிதா அவங்க அம்மாகிட்ட கண்டாங்கி சேலை கட்ட பிராக்டீஸ் ஆரம்பிச்சுட்டா …. எனக்கும் , சூரஜுக்கும் நீங்கதாம்பா …..போனில் கெஞ்ச ….
ஸ்பீக்கரில் போட்டிருந்த போன் வழியே செவியுற்ற மனைவியிடம் …. நம்மால சாதிக்க முடியாததை ஒரு போட்டி சாதிக்குது பாரு… ஊம் … இப்படியெல்லாம்தான்.. இந்தத் தலைமுறைகிட்ட பாரம்பரியம் போற்றணுமோ?
மகனுக்கு ..ஒகே சொல்லி போனை அணைத்தார் தந்தை.
முற்றும்.