எழுத்தாளர்: மு.லதா
கோவிலுக்குச் சென்றுவந்த கல்யாணி,
ஆசையுடன் ஓடிவந்து டேய் சரவணா,+2
ரிசல்ட் வந்துருச்சாமே,என்ன மார்க்டா வாங்கியிருக்க?எந்தெந்த காலேஜுக்கு
விண்ணப்பிக்கப் போற?என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, எல்லாம் நல்ல
மார்க்தாம்மா 480/500, ஆனா இன்ஜினீயரிங்
படிக்கமாட்டேன் என்றான்.
அதிர்ந்து போன கல்யாணி என்னங்க?என்ன
சொல்றான் இவன்? என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள்.
கல்யாணி கொஞ்சம் பொறறுமையா நான் சொல்றதக் கேளேன் என்று அவளது
கைகளளைப் பிடித்து நாற்காலியில்
அமரவைத்துத் தண்ணீர கொடுத்து
ஆசுவாசப்படுத்தினார் கணவன் சசிதரன்.
அதற்குள் சரவணன் அருகே வந்து,அம்மா
சின்ன வயசுலேர்ந்து பைலட் ஆகணும்கற
என்னோட ஆசையை உற்சாகப்படுத்திட்டு
அதற்கான நேரத்துல தடை சொல்லாதம்மா
என்றான் கலங்கிய கண்களுடன்.
டேய் உன் ஃபிரண்ட்ஸ் எல்லாரும்
இன்ஜினீயரிங் படிக்கறப்ப, நீ மட்டும்
பைத்தியம் மாதிரி உளறாம, நல்ல கல்லூரில கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சு
உருப்படற வழியப்பாரு என்று கண்டிப்புடன்
பேசவே அதிர்ந்து போனான்.
சண்டையும்,விவாதமுமாக நாட்கள் உருண்டோட, இங்க பாருங்க இன்னிக்கு
நம்ம குலதய்வம் கோவிலுக்குப்போய்
ரெண்டு விண்ணப்பத்தையும் வச்சு, சாமி
உத்தரவு என்னவோ அந்த கோர்ஸ்தான்
படிக்கணும் சரியா என்றார் சசிதரன்.
கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள கல்யாணி
ஒத்துக்கொள்ள, கலங்கிய மனதுடன், வேறு
வழியின்றி ஒத்துக் கொண்டான் சரவணன்.
சில வருடங்கள் உருண்டோட,இன்று தலைமைப் பைலட்டாக பதவி ஏற்றுக் கொண்ட
சரவணனைப் பெருமை பொங்கப்
பார்த்தாள் கல்யாணி.
கடவுளுக்கும், சசிதரனுக்கும் மட்டுமே தெரியும், அன்று பூசையில் வைத்தது
இரண்டுமே பைலட் கோர்ஸுக்கான
விண்ணப்பம் என்று.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
