எழுத்தாளர்: வனஜா முத்துக்கிருஷ்ணன்
“அம்மா இந்த பாட்டிலில் தண்ணீ வேணும்.ஒரே தாகமா இருக்கு” என்று கேட்ட மளிகை சாமான்கள் கொண்டு வந்த பையன் சேகரிடம்,
“நாங்களே பணம் கொடுத்துதான் தண்ணீ வாங்கறோம்” என்று சிடுசிடுத்த வீட்டுக்கார அம்மாவிடம் தண்ணீர் தொட்டியிலிருந்து வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரைப் பார்த்து,
“க்கும்.பூசணிக்காய் போற இடம் தெரியாது.கடுகுக்கு கணக்குப் பார்ப்பாங்க என்று என் பாட்டி சொன்னது சரிதான்.” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றான் அந்தக் கடைப் பையன் சேகர்.
முற்றும்.