எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி
சங்கீதாவிற்கு, ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது. முதல் நாள் வேலைக்கு செல்வதற்காக லிப்ஸ்டிக் வாங்கினாள். அதுவரை அவள் லிப்ஸ்டிக் உபயோகித்ததே இல்லை. இன்று எல்லோரும் நம்மை பார்த்து ஆச்சரியப்பட வேண்டும் என்று லிப்ஸ்டிக்கை டார்க்காக போட்டுக்கொண்டு டிப்டாப்பாக அலுவலகம் சென்றாள். பஸ்ஸில் கூட்டத்தில் நின்று வேகவேகமாக அலுவலகம் சென்றவுடன் எல்லோரும் அவளைப் பார்த்து சிரித்தனர். ஏன் என்று தெரியாமல், ரெஸ்ட் ரூம் போய் கண்ணாடியை பார்த்தால், வியர்வை வழிந்து லிப்ஸ்டிகுடன் கரைந்து ஆடையெல்லாம் கறை கறையாக கூத்தாடி போல் இருந்தாள்.
முற்றும்.
