10 வரி போட்டிக் கதை: பூசணி பூர்ணிமா

by admin 2
58 views

பூர்ணிமா, ஓர் தனியார் பள்ளியில்,பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் படித்து கொண்டு வந்தாள்.

மிகுந்த அபரிமிதமான அழகி,நல்ல நிறம்,நடுத்தர உயரம்.அவளது ஃபிரண்ட்ஸ் எல்லோருக்கும்,அவளின் அழகின் காரணமாக மிகவும் பிடிக்கும்.பூர்ணிமாவும் அனைவரிடமும் நல்ல முறையில் பழகி வந்தாள்.

நாட்கள் செல்லச் செல்ல அவளின் உடம்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

டாக்டர்கள் அவளுக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் என்று கூறிவிட்டனர்.

அதன் காரணமாக உடலில் பலவித மாற்றங்கள்.அதிக அளவில் முடி கொட்டியது,தோல் கருப்பானது, உடம்பு மிகவும் பருமனானது. 

மெல்ல மெல்ல, அவள் தோழிகள் விலகத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் பூசணி பூர்ணி என்று பட்டப்பெயரும் வைத்துக் கூப்பிட்டனர். 

செத்துவிடலாம் என்று இரு முறை தற்கொலைக்கு முயற்சித்தாள். கடைசி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டது.

தன் புற அழகு போனால் என்ன,அகத்தில் அழகாக  இருப்போம் என்று முடிவு செய்து,படிப்பில் தன் முழு கவனத்தையும் செலுத்தினாள்.

பத்து ஆண்டுகள் கழிந்தன.கலெக்டர் ஆபிஸில், பூர்ணிமா வேகமான  நடை போட்டு தன் அறைக்கு பி.ஏ, டி.ஆர்.ஓ, தாசில்தார் , மற்றும் அதிகாரிகளும்  பின்தொடர சென்றாள்.(சென்றார்)

அறையின் பெயர் பலகையில் ‘பூர்ணிமா தேவி’

“மாவட்ட கலெக்டர்” என்று பளிச்செனப் காணப்பட்டது.

 முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/17130-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!