எழுத்தாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல்
ஒரு ஏக்கர் பரப்பில் அந்த பங்களா 1940 ஆண்டில் ‘உதகமண்ட்'(இப்பொழுது ‘ஊட்டி’)டில் கட்டப்பட்டது.அங்குள்ள படிக்கும் அறை மிகநேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது.தேக்கு மரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன்,அந்தக்கால ஆங்கிலப் புத்தகங்களுடன் நிறைந்து காணப்பட்டது.ஒரு ‘பியானோ’ ,மேலும் இரண்டு லெதர் குஷன் சேர்கள் இருக்கின்றன.குளிர் பிரதேசமாக இருந்ததால் ஒரு ‘பையர் பிளேஸ்’ சிம்னியுடன் இருக்கிறது.
1947 ம் ஆண்டுக்கு பிறகு ‘ராஜ பூதம்’ (இவர் இயற்பெயர் தெரியாது) என்பவருக்கு சாசனம் செய்யப்பட்டது.
அவரது படிப்பறையிலிருந்துதான் பல பேய் கதைகளை எழுதினார் ராஜ பூதம்.அவர் எழுதிய ‘பேயும் நானும்’, ‘பேயோடு பேசு’, பேய் vs பூதம் என்ற கதைகள் பேய்த்தனமாக விற்பனையானது.
அவர் 1965 ம் ஆண்டு இறந்த பிறகு,அவர் மகன் ‘ராஜ ராஜ பூதம்’ பேய்கதைகளை தொடர்ந்து எழுதி வந்தார்மேலும் ‘பேய்க்கதை மன்னன்’ என்ற பட்டத்தையும் பெற்றார்.
தினமும் அந்த படிப்பறையில் ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில்,இரண்டு பெக் விஸ்கியை உள்ளே இறக்கிய பிறகு(அப்போதுதான் சுதி ஏறுமாம், யாருக்கு? (இவருக்கா அல்லது பேய்க்கா).
அன்றும் நடுநிசி தாண்டி ‘பேயோடுதான் நான் பாடுவேன்’ என்ற புதினத்தை எழுதும்போது மெழுகுவர்த்தி திடீரென அணைந்து, ஒரு பலத்த சப்தம் எழுந்தபோது நம் பூதத்தின் தோளை யாரோ பிடிப்பதைத் கண்டு,ஓ என்று அலறியபடியே மயக்கமாகிவிட்டார்.( ஒரு பூனை அலமாரியிலிருந்த கனமான புத்தகத்தைத் பியனோ மேல் தள்ளிவிட்டு,இவர் மேலே இரு கால்களை வைத்து குதித்துச் சென்றிருந்தது)
நம்ம ராஜ ராஜ பூதம், பத்து நாளைக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஒரு மாதம் கழித்து ‘பேயோடுதான் நான் ஆடுவேன்’ என்ற புதிய கதையை எழுத ஆரம்பித்தார் நம் ‘பேய்க்கதை மன்னன் ராஜ ராஜ பூதம்’.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/