எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம்
ஏங்கேயாவது இந்த கூத்தை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?,
திருடனே தன்னை காப்பாற்ற ஊர் மக்களை கூப்பிடுவதை.
காலை மணி மூணு ஊர்மக்கள் எல்லாம் நன்றாக உறங்கி கொண்டு
இருக்கிறார்கள் ஊர் கேரளா அங்கு மங்களூர் ஓடு போட்ட வீட்டில்
திருடன் ஒருவன் லாகவமாக ஏறுகிறான். மெள்ள உடைந்து இருக்கும்
நாலைந்து ஓடுகளை நகற்றி உள்ளே கயிறு கட்டிட்டு இறங்க போகிறான்
திடீர் என்று “மியாவ்” என்று சப்தம் கேட்கிறது .
திடுக்கிட்டு திரும்புகிறான்.அவன் முன் ஒரு பெரிய பூனை சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது. பூனை என்றாலே பயம் சின்ன வயதில் பூனை பிறாண்டி விட்டு செப்டிக் ஆனதை மறக்கலை ஷு ஷு என்கிறான். பூனை இந்த வீட்டுக்கு காவல் காரன் போல் “ உர் உர் என்றது.
பொழுது விடிய போகிறது. ஆட்கள் எழுந்து விட்டால், தர்ம அடி தான். இந்த சமயம் பூனை ஆக்ரோஷமாக அவன் மேல் பாய்கிறது.
கால் மறந்து விட்டது. கீழே பார்த்தால் தலை சுற்றுகிறது மயக்க நிலைக்கு வந்து விட்டான். உயிர் பயத்தால் ” காப்பாத்துங்க… காப்பாதாதுங்க…. ஒனறு கத்தினான்.
ஊர்மக்கள் எல்லோரும் ஓடி வந்து விடடார்களா. நாலு அடி
கொடுத்து ஏணி மூலம் இறங்க பார்த்தார்கள் இறங்க முடியலை. இருவர் வேணும் தூக்கிண்டு வர ஓடு தாங்காது. தூரத்தில் தீயணைக்கும் வண்டியின் மணி சப்தம் கேட்டது. ஓடிப்போய் அந்த
வண்டியை கூட்டிண்டு வந்து திருடனை இறக்கி ஆஸ்பிடலில் சேர்த்தனர்.
பாவம்னு கேஸ் போடலை.
முற்றும்.
