10 வரி போட்டிக் கதை: மானம் காத்தது…

by admin 1
44 views

ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான், திரும்பியபோது தான் கவனித்தேன், பக்கத்தில் இருந்த பெண் கைப் பையால் மறைத்தபடி நெளிந்து கொண்டிருந்தாள். ஜாக்கெட்டில் மேல் ஹுக்கு கழன்று..யாரோ பார்த்ததை இவள் கவனித்து.. இயலாமையோடு  என்னைப் பார்த்தாள். 

என் கைப்பையிலிருந்து ஒரு ஊக்கு எடுத்துக் கொடுத்து போடச் செய்தேன்.  பல முறை நன்றி சொல்லி இறங்கிப்போனாள். நான் ஆனந்தி டீச்சர் க்கு நன்றி சொன்னேன்…பள்ளியில் எட்டாவது படிக்கும் போது, என் பின்னால் இருந்தவள், எனது சீருடை சட்டையை இழுக்க, இரண்டு பொத்தான்கள் கீழே விழ, அவமானம் தாங்காமல் அழ ஆரம்பித்தேன். ஆனந்தி டீச்சர் பாடத்தை நிறுத்தி விட்டு,  என்னை வெளியே அழைத்துப் போய்..காரிடாரில் யாவும் இல்லை என்பதை உறுதி செய்து, என் சட்டையில் இரண்டு ஊக்குகள் பொருத்தி, “எப்பவும் ரெண்டு ஊக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் ல வச்சுக்கமா, உதவும்” என்று அன்று சொன்னதை இப்போதும் கடை பிடிக்கிறேன்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!