எழுத்தாளர்: உஷாராணி
சுற்றுலாக் கட்டுரை ஒன்று எழுத வேண்டும் என்று நச்சரித்துக்கொண்டிருந்தாள் பவித்ரா.
அவர்கள் ஊர் மலை அருவிக்கு அழைத்துப்போனால் நேரில் பார்த்து எழுத முடியும். பரிசு
கூடக் கிடைக்கும். இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது கட்டுரை எழுதிக்கொடுக்க என்று
பிடிவாதம். அப்பாவிற்கு ஏது நேரம் என்பது அம்மா சரண்யாவின் வாதம்.
“அப்பா மட்டும் தனியா காமரா எடுத்துட்டுக் கெளம்பிடறாங்களே.. அப்ப மட்டும் டயம்
இருக்கா” என்ற மகளின் கேள்விக்கு அவர் தொழிலே அதுதானே என்று சரண்யா
கம்ப்யூட்டரில் யூ ட்யூபைத் திறந்தாள். யூ ட்யூபரான அப்பா சந்திரன் காமராவில் அவர்கள்
ஊர் அருவியை நிரப்பி “வாருங்கள் நண்பர்களே” என்று பொழிந்து கொண்டிருந்தான். அதைப்
பார்த்துக் கட்டுரை எழுத ஆரம்பித்தாள் பவித்ரா.
முற்றும்.
