எழுத்தாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல்
“சிவகாமி,சிவகாமி”என்று ரகு தாத்தா சத்தம் போட்டு தன் மனைவியை அழைத்தார்.
எதிர் திசையிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை.
கடந்த பத்து நிமிடமாக தன் மூக்கு கண்ணாடியை தேடிக் கொண்டிருந்தார்.அவரால் கண்ணாடியின்றி ஒரு நான்கு அடி தூரத்திற்கு மேல் பார்க்க முடியாது.
மீண்டும் சிவகாமியை அழைத்த போதுதான், சிவகாமி வெளியே சென்றது ஞாபகத்திற்கு வந்தது.
கடந்த அரை மணி நேரமாக ரகு தாத்தாவிற்கு உலகமே இருண்டது போலிருந்தது.
வெளியே சென்றிருந்த சிவகாமி அம்மாள் வந்தபின்,அவரும் வீடு முழுவதும் கண்ணாடியைக் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் ரகு தாத்தா மூன்று வயதான பேத்தி,”தாத்தா கண்ணாடி உங்க சர்ட் பாக்கெட்ல இருக்கு,பாருங்க” என்றாள்.
ரகு தாத்தா” ஹி ஹி ஹி ஆமாண்டா கண்ணு” என்று லிட்டர் கணக்கில் வழிந்தார்.
முற்றும்.