10 வரி போட்டிக் கதை: ரெய்டு

by admin 1
60 views

எழுத்தாளர்: லீலா ராமசாமி

“நாமும் வீட்டைச் சல்லடையாய் சலித்தும் சந்தேகப் படும்படியா ஏதும் கிடைக்கலியே” என்று பிரபல
தொழிலதிபர் வீட்டில் ரெய்டு நடத்திக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
“நம்பகமான இடத்துல இருந்து தானே செய்தி வந்தது?”
“எல்லா ரெகார்ட்ஸ், தோட்டம், கார், சர்வீஸ் ரூம் எல்லாத்தையும் கூட சோதிச்சும் ஏதும் கிடைக்கலியே.”
“கணவன் மனைவி ரெண்டு பேரும் எல்லாச் சாவிகளையும் நம்மகிட்ட கொடுத்துட்டு ஹால்ல தான்
உக்காந்திருக்காங்க” “பிள்ளை வெளிநாட்டுல இருக்காரு.”
“நாம வீட்டைச் சோதனைச் செய்றதாலே இந்த வீட்டுச் சொந்தக்காரருக்கு வயிறு கலக்கி அடிக்கடி பாத்ரூம் போய் வர்றார்” என்றார் ஒருவர்.
“அந்த பாத்ரூமைத் திறங்க” என்று உள்ளே சென்ற அதிகாரி ஒருவர் அந்த மேற்கத்திய கழிவறையின்
பேசினைக் கையிலிருந்த கத்தியால் சுரண்டினார்.
“என்னங்க சார் டாய்லெட்டைச் சுரண்டுறீங்க?”
“இங்கே ஏராளமா வங்கிக் கடனை வாங்கிட்டு வெளிநாட்டில் போய் வாழுற ஒரு தொழிலதிபர் கழிவறையைத் தங்கத்தாலேயே செய்திருக்கிற மாதிரி இங்கேயும் இருக்குமோங்கற சந்தேகம் தான்!”
கத்தியால் சுரண்டியதில் மேலே பூசப்பட்டிருந்த எனாமல் பெயிண்ட் நீங்கி உள்ளே பளபளப்பான தங்கத் தகடு மின்னியது.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!