எழுத்தாளர்: வாசவி சாமிநாதன்
“என்னடா மணி எங்க போயிட்டு வர “ கேட்டார் தாத்தா வசந்த்.
“ரொம்ப சோகமா முகத்த வச்சிருக்க என்ன விஷயத்தை சொல்றா? “ என்றார் தாத்தா வசந்த் “ தாத்தா நா எவ்வளது விட்டு கொடுத்து போனாலும் அஜஸ்ட் பண்ணி போனாலும் எனக்கு எப்பவும் அடிக்கிடைக்குதே “ என்றார் மணி .
“எப்படிதான வாழ்றதுன்னு தெரியில மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
தாத்தா ‘என்றான மணி .
“ சரி வா பைக்க எடுடா “ என்றார் தாத்தா வசந்த்.
“எதுக்குக்கு தாத்தா “ என்று கேட்டப்படி வண்டியை எடுத்து ‘எங்க போகனும் தாத்தா “என்றான மணி.
“வா நா உனக்கு காட்டுற பாதையை “ என்றப்படி வழிகாட்ட மணியும் தாத்தை பைக்கில் வைத்து ஓட்டினான் மணி
சிறிது தூரம் சென்றதும் அங்கு மூங்கில் காடு பகுதியில் மூங்கில் கம்புகளை பச்சையாக இருக்கும் போதே இரு மர கிளை இடுக்கில் இட்டு வளைவுகளை நேராக்கி கொண்டிருந்தனர் தாத்தா அதை காண்பித்து “ இங்க பாரு மணி மூங்கி உயரமாக வளர்ந்தாலும் அவற்றை வளைவு
எடுக்க இருக்கில் மாட்டி எவ்வளவு துன்பத்தை அனுபவக்கிறது
அது போல தான் நம்ம சரி செய்ய சில நேரம் பல இருக்கில் மாட்டி வெளியே வர வேண்டியுள்ளது.
“ தாத்தா வசந்த்.
“வாழ்க்கை என்பது சூழ்நிலைக்கு தக்கப்படி வளைந்து கொடுக்கத்தான் செய்யனும் “ என்று அறிவுரை தாத்தா வசந்த
“ ஓங்கி வளர்ந்த மூங்கில் கூட ஒராயிரம் வலிகளை அனுபவிக்கதான் செஞ்சுதான் பயன்பாட்டுக்கு வருதா தாத்தா “ என்றான் மணி
மணிக்கு தெளிவு பிறந்த சந்தோசத்தில் முகம் மலர்ந்து
“மிக்க நன்றி நாத்தா “என்றான் மணி
தாத்தா வசந்த்தும் மணி இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்
முற்றும்.