எழுத்தாளர்: சுஶ்ரீ
மண்டபத்தில் கல்யாண வரவேற்பு தடபுடலாய் நடந்து கொண்டிருந்தது
கழட்ட முடியாத புன்னகையுடன் மணமக்கள் ஒரு புறம்
பிரபல இசைக்குழு மறு புறம் மணமக்களுக்கு பரிசு வழங்கும் கூட்டம் வெண்ணிற ஆடை அணிந்த இருக்கைகளில் பாட்டை ரசிக்க கூட்டம்
பாடகர்கள் ஒன்றன் பின் ஒன்றாய் ஜனரஞ்சகமாய் பாடினர்
ஒரு ரசிகர் தன் விருப்பப் பாடலை கடிதமாய் அனுப்பினார்.இசைக்குழுத் தலைவர் திகைத்தார் சாக்சஃபோன் அதிகம் தேவையான பாடல் ஆனால் அன்று சாக்சஃபோன் கலைஞர் வரவில்லை.திடீர்னு இனிமையான சாக்சஃபோன் ஒலி,மிமிக்ரி ஆர்டிஸ்ட் பிரபு சிரித்த வண்ணம் சாக்சஃபோன் ஆனார்.
முற்றும்.