10 வரி போட்டிக் கதை: ஷாக்.. ஷாக்.. 

by admin 2
60 views

சிவப்பு வண்ண மேஜையால் இருக்கைகள் அமைக்கப்பெற்று சாய்வதற்கு வசதியாகவும் இருக்கைகளையும் வைத்துக் கொள்ள வசதியாகவும் கிட்டத்தட்ட ராஜா காலத்து நாற்காலி போல இருக்கும் அந்த நாற்காலி  அவர்களின் குடும்பத்தின் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து அந்த வீட்டையும் அவர்களின் சொத்துக்களையும் கட்டி ஆளும் அந்த நபருக்கே உரியதாக இருக்கும். அப்படி இந்த தலைமுறையில் வெற்றிக் குமரன்  தான் அந்த நாற்காலிக்கு சொந்தக்காரர். அந்த நாற்காலியில் பலரும் சும்மா உட்கார்ந்து பார்க்கவாவது ஆசைப்படுவது உண்டு.

அதனால் அதில் வேறு யாரும் அமரவே கூடாது என்பதற்காக அதில்  வெற்றி குமரனால் மின்சாரம் பொருத்தப்பட்டிருந்தது. அவன் கையில் தான் அதன்  இயக்கம் இருக்கும். அவன் இல்லாத நேரத்தில் யாராவது அமர்ந்தால் அது ஷாக் அடித்து அவர்களை தூக்கி வீசும்.

வெற்றி குமரனும் ஒரு நாள் மர்மமான முறையில் இறந்து விட அதற்கு அடுத்து யாரை அதில் அமர வைப்பது என்று போட்டா போட்டி நடந்து அது தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி குமரனின் அண்ணன் மகனான கதிரவன் அமரப் போக யாரும் எதிர்பார்க்காத வகையில் அவன் தூக்கி வீசப்பட்டான்.

அதில் அதிர்ந்து போன குடும்பத்தார் மின்சார இணைப்புகளை எல்லாம் துண்டித்து விட்டு அவனை அமரச் சொல்ல அப்போதும் அவன் தூக்கி வீசப்பட்டான். அனைவரும் அதிர்ச்சியில் கண்கள் விரிய பயந்தபடியே அந்த நாற்காலியை பார்க்க வெற்றி குமரனே அமர்ந்திருப்பது போல அவர்கள் கண்களுக்கு தெரிந்தது.

வெற்றி குமரனுக்கு வாரிசு இல்லாததால் அவனை கொன்றுவிட்டு தான் அமர வேண்டும் என்று நினைத்த கதிரவனின் முகத்தில் இருள் படிந்தது.

 முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/17130-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!