எழுத்தாளர்: சந்திரசேகரன் ச
கடற்கரைக்கு அருகில் ரம்மியமாய் காட்சியளித்து கொண்டிருந்தது தெங்கப்பட்டிணம் என்ற கடற்கரை கிராமம்.
கடற்கரையை ஒட்டிய கிராமம் என்றாலும் அங்குள்ள மக்கள் மீன் பிடித் தொழில் செய்யும் பரதவர்கள் அல்ல; அவர்கள் உழவுத் தொழில் செய்பவர்களாவர்.கடற்கரையிலிருந்து கிராமம் ஒரு மைல் தொலைவில் இருந்தது.
விசாகன் என்றொரு வாலிபன் தன் நிலத்தை உழுது கொண்டு இருந்தான். உச்சி வெயில் என்றும் பாராமல் உழவு ஓட்டிக் கொண்டிருந்தான். அப்பகுதி முழுதும் வறட்சியே காணப்பட்டது. மழை பெய்து ஆறு மாதங்கள் ஆனாதால் மக்கள் அவதியுற்றனர். இதைவிடவும் கடும் கவலையில் இருந்தான் விசாகன்.காரணம் அவன் பெற்றிருந்த கடன் அவ்வளவு.
நோய் வாய்ப்பட்ட அவன் தந்தை,தினமும் குடும்பத்தைக் காப்பாற்ற கூலி வேலை செய்யும் விசாகனின் தாய். ஒரு நாள் கவலையில் கடற்கரையின் தலைகுணிந்து கவலையில் உட்கார்ந்திருந்தான்.
கடல் அலைகள் அன்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஓர் அழகிய நங்கை கடலில் இருந்து வெளிப்பட்டாள். விசாகனின் மனச் சோர்வுக்கு அவள் தினம் மருந்திட்டாள். அவர்கள் தினம் சந்தித்துப் பழகி காதல் வயப்பட்டனர்.
இப்படியே ஓராண்டு ஓடியது..ஒரு நாள் விசாகன், கடல்கன்னியைச் சந்திக்க வரவில்லை. அவள் அன்று முழுதும் அங்கு காத்திருந்தாள். இருப்பினும் வரவில்லை. அடுத்த நாள் விசாகன் தனக்கு திருமணமானதை கடல்கன்னியிடம் வந்து கூறினான். கடல்கன்னி, உன்னைப் பிரிந்து நான் எங்கும் செல்ல மாட்டேன் என்று விசாகனிடம் கூறி கரையிலே கிடந்தாள்.
கடலில் வாழ பழக்கப்பட்ட , உற்ற காலத்தில் விசாகனின் மன கலக்கத்தைப் போக்கிய , விசாகன் காதலித்த,விசாகனைக் காதலித்த கடல்கன்னி அவன் நினைவிலே கரையிலே கிடந்து மடிந்தாள்…. எது இறுதியில் வென்றது?(வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப)
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/
