எழுத்தாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி
கண்களில் நீர் வழிய சோகத்துடன் அமர்ந்திருந்த கோமளாவை பார்த்தவுடன் பசுபதி அப்படியே கலங்கிப் போய்விட்டார்.
“ என்ன ஆச்சு கோமளா ? என்ற அவர் கேள்விக்கு கோமளா அழுதுகொண்டே, அமெரிக்காவிலிருந்து சுரபி வரதால, அவளுக்கு நம்ம ரூமை கொடுக்கணுமாம்,
என்னை அடுக்களை பக்கத்தில் உள்ள சின்ன ரூமில் கட்டிலில் படுத்துக்கொள்ள சொல்லி விட்டு, உங்களுக்கு ஹாலில் திவானில் படுக்கை ஏற்பாடு செய்யப் போறாளாம்.
இவ்வளவு வருஷமா சேர்ந்து கூடவே இருந்துட்டு இப்ப தனியா படுத்துக்க எனக்கு பயமா இருக்கு. ‘
இதைக் கேட்டதும் பசுபதி கொதித்துப் போய் “இவன் பெண் வந்தா அவனோட பெட்ரூமைக் கொடுக்க வேண்டியது தானே? என்று சொல்ல, ஜானகி,
“நமக்குத்தான் வயசாச்சே – இனிமே எதுக்கு சேர்ந்து படுத்துக்கணும்னு நினைச்சிருப்பான்” என்று சொல்ல, ராகவையர், “ சின்ன வயசுக்காரளை விட வயசான தம்பதிகள் சேர்ந்து படுப்பதுதான் முக்கியம்.
மனசாலும் வயசாலும் தளர்ந்து போன தம்பதிகளுக்கு ஒருத்தருக்கொருத்தரின் அண்மை தான் டானிக் என்பது யாருக்குமே புரிவதில்லை” என்று சொல்லிவிட்டு,
“ கவலைப்படாதே நான் ஒரு வழி செய்கிறேன்” என்று சொல்லி விட்டு, தன் நண்பரை பார்க்கச் சென்று விட்டார்
மறுநாள், காலையில் அவர் மகன் மருமகளுடன் சேர்ந்து காலை உணவு உண்ணும்பொழுது “ ரவி ! நானும் அம்மாவும் சுரபி வருவதற்கு முன் தனிக் குடித்தனம் போகிறோம்.
இங்குதான் பக்கத்தில் உள்ள பணம் கொடுத்து தங்கும் முதியோர் இல்லத்தில் அட்வான்ஸ் கொடுத்து விட்டேன்” என்று சொல்லி விட்டு கோமளாவின் சுருக்கம் விழுந்த கையை தன் கையால் பற்றிக் கொண்ட பொழுது, கோமளாவின் முகத்தில் “இவர் என்னுடையவர்” என்ற பெருமை தெரிந்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
