எழுத்தாளர்: பிரபாவதி ராஜா
ஒரு நாள் மேடையில் தன் மூன்றாவது இசைக் கச்சேரியில் சிறந்த பயிற்சியின் பலனாக லாவகமாக கிடாரை மீட்டிய சதீஷ் தனது இசையில் கட்டுண்ட ரசிகர் கூட்டம்
ஆரவாரித்து மகிழ்ந்ததை, தன் கண்களும், காதுகளும் குளிர , ரசித்துக் கொண்டிருந்தான்.
தன் இசைக்கு இன்றுதான் சரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது,
இனி , இசை வானில்
சிறகடித்துப் பறக்கலாம் என்று
மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தான்.
பலத்த கரவொலியுடன் இசையில் மயங்கி, இளைஞர்கள் ஆர்ப்பரிக்க,
லேசாக வானம் பூ மாரிப் பொழியத்
துவங்கியது.
மின்னலும் இடியும், கச்சேரிக்கு பின்னணி இசை கூட்ட, இசை மழையுடன் வான் மழையும் பொழிய , கூட்டம் மெதுவாகக் கலைந்து சென்றது.
ஆனால் அவள் மட்டும் சின்னக்
கருப்பு உடையில், பளிச்சென்று
மின்னல் படம் எடுக்க, தேவதையாக
அவன் கண்ணில் பட்டாள்.
மழை தனது பின்னனி இசையை சற்றே உயர்த்த, அவள் கைகள் விரித்து முகத்தை மேல் நோக்கி உயர்த்தி, மழைத் துளியை தன் முகத்தில் விளையாட விட்டு . கண்கள் மூடிய படி இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள்.
அவன் இசையை நிறுத்தாது, தொடர்ந்து
அந்தி மழை பொழிகிறது பாடலை பாடி, அவள் செவிகளுக்கு த் விருந்தளித்தான்.
அவளது சுருள் முடி, அவளது அழகிய கன்னங்களை மேடையாக்கி, மெல்லிய
நடனமாட, இசையில் மயங்கியவளின்
புருவங்கள் வில்லாகி , கணை தொடுக்க தயராகியது.
அவன் மேடையிருந்து இறங்கி, கிடாரை இசைத்த வண்ணம், அவளை நெருங்க, அந்த மழைத் துளி மிதக்கும் மதிமுகத்தின் பிரகாசத்தில், தன்னை மறந்து பாடலை நிறுத்த , அவள் கண்களை பட்டென திறக்க, சட்டென விழுந்தான் அவள் நீள்விழித் தூண்டிலில் .
சுருக்கென்று தைத்தது நீல வண்ணக் காதல் முள் , வலியால் ஐயோ என்று துடித்து எழுந்தான் கட்டிலிலிருந்து …
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/