எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: குடை
கார்மேகம், நூறு வீடுகள் இருந்த அந்த மலைக்கிராமத்தின் தலைவர். நல்லவர்தான், சற்றே வீண் ஜம்பம் பிடித்தவர்.
மகசூல் ஆயிடுச்சுல்ல , எல்லாம் நா பார்த்துக்கிறேன். நல்லா பேரம் பேசிவித்துத் தர்றேன். இதெல்லாம் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?
ஆனால் உண்மை சங்கதி? இவரால்தான் வருடம் முழுக்க உழைத்த அப்பாவி சனங்களின் வரும்படி குறைகிறது.. வெளியில் சொல்ல முடியுமா?
கார்மேகம் வயோதிகத்தை அடைய பொறுப்பு மகன் மயில்வாகனம் கையில். கிராமமே அவன் புகழ் பாட, கார்மேகம் தாயிடம் , எம்புள்ளைய இந்த ஊர் புகழறது எனக்கும் பெருமைதான்.ஆனா நானும் இவங்களுக்குன்னு பார்த்துப் பார்த்துதானே செஞ்சேன்.
நம்மள மழையிலேருந்து காப்பாத்துற குடைய மற்ற நேரங்கள்லே மூலையிலதானே வைக்கிறோம். அது கவலைப்படுதா? எந்த நிபந்தனையுமில்லாமத் தன்னோட வேலையச்
செஞ்சுட்டுத்தானே இருக்கு.
அதுபோல, நம்ம மனசுல இருக்குற கன்மம், மாயை ,ஆணவம், …இதெல்லாம் சம்ஹாரம் செஞ்சுட்டு மனசை நிர்மலமா வைச்சுக்கிட்டா கவலைப்பட வேண்டியதேயில்ல .
தாயின் பேச்சில் தெளிந்தாரா கார்மேகம்?
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.