100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ஆசைப் படு

by admin 3
71 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்

சொல்: ஊஞ்சல்

“அம்மா..! நானும்  வரேன் மா உன்னோட..!”

“வேண்டாம். எதாவது சேட்டை செஞ்சா எனக்குத் தான் கஷ்டம்.”

அம்மா ‘அந்த வீட்டு அம்மா ஊஞ்சலில் மகாலட்சுமி மாதிரி உட்கார்ந்து இருப்பாங்க’ என்று சொல்லி சொல்லி  வள்ளிக்கு அந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆட ஆசை.

கால சக்கரம் உருண்டது. வள்ளி இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு.‌
‘என் நிறைவேறாத ஆசை’ என்ற தலைப்பில் ஆசிரியர் கட்டுரை எழுதச் சொன்னார்.
“சிறந்த கட்டுரைக்கு பரிசு உண்டு.”
மறுநாள் அனைவரும் தங்கள் பேப்பரை டீச்சரிடம் தந்தனர்.

செப்டம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று  போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு தாளாளர் தன் கையால் பரிசு வழங்கும் நிகழ்வு.

  “வள்ளி பன்னிரண்டாம் வகுப்பு கட்டுரை போட்டியில் முதல் பரிசு.” என்று அறிவித்தார் ஆசிரியை.

“வள்ளி தன் கட்டுரையில் அழகாக தன் எண்ணங்களை வார்த்தைகளில் வடித்து இருக்கிறார். எனவே அவருக்கு முதல் பரிசு.

விழா முடிந்து வீட்டுக்கு வந்த வள்ளிக்கு ‘அன்பளிப்பு’ என்ற முத்திரையுடன் தோட்டத்தில் ஊஞ்சல்.

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!