எழுதியவர்: சரண்யா கார்த்தி
சொல்: மஞ்சம்
அமிர்தா ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தால் அந்தப் பள்ளி காப்பகம் ஆகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தது,
அந்த நிறுவனத்திற்கு பல வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து கொண்டிருந்தன,
ஒரு நாள் அமிர்தா பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்தால், அவள் , அப்போது புதரில் ஒரு மழலையின் அழுகுரல் கேட்டது,
உடனே ஓடி சென்று எட்டிப் பார்த்தால் அங்கு அந்த மழலை சுற்றி எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன,
அந்தக் குழந்தை பிறந்து கிட்டத்தட்ட ஒரு நாள் தான் இருக்கும், அந்த குழந்தையை யாரோ புதரில் போட்டு விட்டு சென்றிருந்தன,
எப்படி தான் மனம் வந்தது என்று தெரியவில்லை அந்த பிஞ்சு குழந்தையை விட்டு விட்டு செல்ல, என்று அமிர்தா தனக்கு தானே நொந்து கொண்டு அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்தாள், அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது,
பின்பு ஓரிரு நாட்களில் அந்த குழந்தை பிழைத்து வந்தது, அமிர்தா அந்தக் குழந்தையை தன் காப்பகத்திலேயே தன் பொறுப்பில் சேர்த்துக் கொண்டாள்,
அந்த ஊரிலே மிகப்பெரிய தங்க வியாபாரியான இளங்கோ சுமதி தம்பதியினருக்கு குழந்தை இல்லாமல் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருந்தன,
அவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் முடிந்து இருந்த நிலையில் அமிர்தா வேலை செய்யும் காப்பகத்திற்கு வந்து அவர்கள் திருமண நாளை கொண்டாடின,
அப்போது அந்த குழந்தையை பற்றி அமிர்தா சொல்ல உடனே சுமதிக்கு ஆர்வம் அதிகமாகி அந்த குழந்தையை போய் பார்த்தால் பார்த்ததும் அந்த மழலையின் மழலை சிரிப்பும், மின்மினி போன்ற கண்மணிகளும் அவளை தன்னிலை அறியாது ஈர்த்தது,
உடனே தன் கணவனிடம் சென்று நாம் ஏன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கக்கூடாது என்பதை பற்றி பேசினால் அன்று இரவே, இருவரும் இரு நாட்கள் கலந்து ஆலோசிட்ட பிறகு அமிதாவிடம் இந்த நற்செய்தியை சொல்ல அவளும் அதற்கான ஃபார்மாலிட்டீஸ் எல்லாத்தையும் முடித்து குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தாள்,
அவர்கள் குழந்தையை வாங்கிக் கொண்டபோது இருவரின் மனமும் வானத்தில் சிறகடித்து பறக்கும் பறவை போல பறந்து கொண்டிருந்தது,
அவர்களுக்கென்று ஒரு குழந்தை என்ற எண்ணமே அவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது, அந்த மகிழ்ச்சியோடு அவர்கள் இல்லத்திற்கு சென்றனர்,
அப்பொழுது அந்த மழலைக்கு என்று தங்கத் தொட்டியில் மஞ்சம் அலங்கரித்து கொண்டிருந்தார்கள் அவர்கள் வீட்டு வேலையாட்கள்,
மழலைக்கு பெயர் வைக்க இப்போது அந்த மழலை மஞ்சம் புதரில் இருந்து தங்கத் தொட்டிலுக்கு மாறியது.
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.