100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: பழக்கம்

by Nirmal
129 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்

சொல்: முட்டை

“அம்மா…! இன்றைக்கு எங்க டீச்சர் வைட்டமின் பாடம் எடுத்தாங்க. முட்டையில்  வைட்டமின் ஏ, வைட்டமின் டி, மினரல், கொஞ்சம் கொழுப்பு இருக்கு. வளரும் குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து’ என்று கூறினார்.”

“பரவாயில்லையே..! பாடத்தை நல்லா கேட்டிருக்க.”

“ஆனா..! நம்ம வீட்டில ஒரு நாள் கூட எனக்கு கொடுக்கலையே…!”

“அதுவா..! இங்கே வா..! பக்கத்து வீட்டில அந்த கோழி முட்டை மேல் உட்கார்ந்து அடை காக்குது. அதில் இருந்து ஒரு சின்ன கோழிக் குஞ்சு வரும். அதனால் நாம் முட்டையை உயிரா பார்க்கிறோம்.”

“டீச்சர் யார் எல்லாம் சாப்பிடறீங்க என்று கேட்டதும் நிறைய பேர் கையை உயர்த்தினாங்களே..!”

“அவர்கள் சாப்பிடுவது தப்பில்லை. அவர் அவர் விருப்பமும் பழக்கமும்.”

” நமக்கு அதில் உள்ள சத்துக்கள் எப்படி கிடைக்கும்?”

“சரியான கேள்வி.  பூசணிக்காய், ஆளி விதை, பன்னீர், வாழைப் பழம், உருளைக் கிழங்கு, கொண்டைக் கடலை சாப்பிடுவதால்.”

“அதான்  பூசணிக்காய் சூப், கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட சொல்றீங்களா..!

முற்றும்.

📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!