எழுதியவர்: அ. கௌரி சங்கர்
சொல்: மஞ்சம்
ATM – காவல் வேலை செய்யும் – கணேசன் எதிர்த்த கடையில் அன்றைய தின தினசரியை படித்த போது, ராசி பலன் பகுதியில் அவனுடைய மகர ராசிக்கு கிடைத்த தகவல்கள் அவனை உச்சாரத்திற்கு கொண்டு சென்றன.
“இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு பண மழை வந்து கொட்டும்”. நடந்து வந்து நாற்காலியில் அமர்ந்த கணேசனுக்கு அந்த வாக்கியம் 30 வது முறையாக நினைவில் வந்து வந்து சந்தோச வெள்ளத்தில்
குளிப்பாட்டியது. திக்குமுக்காடிபோனவன், அப்படியே உறங்கியும் போனான்.
“”””கணேசன், மஞ்சத்தில் சாய்ந்து இருக்கிறான். பிங்க் உடையணிந்த 20 சீன தேசத்து தேவதைகள் ஆடி வருகின்றனர். கைகளில் தங்கத்திலான கூடைகள் உள்ளன. கணேசனை சுற்றி ஆடி பாடுகின்றனர். கூடைகளை அவர்கள் அவன் மீது கவிழ்க்க ஆயிரக்கணக்கான 500 ரூபாய் நோட்டுகள் அவனை மூழ்க
செய்கின்றன””””.
…
பொசுக்கென்று விழித்த கணேசனுக்கு தெரிந்தது – ATM மெசினை சத்தம் இல்லாமல் உடைத்து, பணத்தை எடுத்துக்கொண்ட திருடர்கள், குப்பைகளை அவன்மீது கொட்டிவிட்டு, ஒரு பாட்டில் தண்ணீரையும் ஊற்றிவிட்டு சென்று இருக்கிறார்கள் என்று.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.