எழுதியவர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல்
சொல்: முட்டை
தமிழ் செல்வனின் அம்மா தட்டை வைத்து பழைய சோற்றைப் போட்டாள்.
நம் செல்வன் ‘போம்மா இன்னைக்கும் பழைய சோறுதானா ‘எனக்கு ஒன்னும் வேண்டாம்’,என்று கோபமாக சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
வெளியே வந்த செல்வனைப் பார்த்த சுரேஷ்’செல்வா எப்படியிருக்க? இன்னைக்கு என் பர்த்டே. கண்டிப்பாக என்னோடு என் வீட்டுக்கு விருந்து சாப்பிட வரணும்.
சுரேஷ் வீட்டில் டைனிங் டேபிளில்,இலையில் பரிமாறப்பட்ட உயர்ரக சாப்பாட்டை இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, சுரேஷ் அப்பா செல்வனை முறைத்துப் பார்த்தபடி உள்ளே சென்றார்.
கோபமாக ‘சிவகாமி இந்த (ஜாதிப் பெயரை சொல்லி) பயலுக்கு டைனிங் டேபிள் கேக்குதோ’ என்று திட்டினார்.
இதைக்கேட்டு அவமானப்பட்ட செல்வன் அந்த வீட்டை விட்டு வெளியேறி, பக்கத்திலிருந்த குப்பை தொட்டியின் முன்னே தன் இரண்டு விரல்களையும் வாயில் விட்டு வாந்தி எடுத்தான்.
‘அம்மா பசிக்குது,சோறு போடு’.
அந்த பழைய சாதம் அவனுக்கு தேனாக இனித்தது.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.