எழுதியவர்: அ. கௌரி சங்கர்
சொல்: சந்தனம்
ராஜா நாட்டு மருந்து கடை – அந்த சிறிய நகரத்தில் மிகவும் பெயர் பெற்ற கடை. சித்தவைத்தியர்கள் பரிந்துரைக்கும் பலவிதமான மூலிகைகள், வேர்கள், மாத்திரைகள், கிடைக்கும் இடம்.
ஒரு காலத்தில் வைத்தியர்கள் குறித்து கொடுக்கும், மருந்துகளை பெரியநகரங்களில் இருந்து வாங்கி வைத்திருந்து அவற்றை விற்று வந்த கடை முதலாளி ராஜா, நாளடைவில், மருத்துவர்கள் மரித்து போக, அவரே மருத்துவராக மாறியும் போனார். நோய்களுக்கு வினாடியில் மருந்துகளை எடுத்து தந்து விடுவார். தனது முன்பு நின்று கொண்டு இருந்த வாலிபனை பார்த்து சொன்னார்.
“தம்பி, நம்ம கடையிலே சந்தன பொடி வாங்கி தண்ணியிலே கரைச்சி தர்ற வழக்கம் இல்லை. சந்தனக்கட்டையை எடுத்து, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, பலகையிலே தேய் தேய்னு மணிக்கணக்குல தேய்ச்சி எடுத்தால், இரண்டு கரண்டி சந்தனம் கிடைக்கும். வாசம் உங்களை சுத்தி சுத்தி வரும்.
அந்த சந்தனம் வேண்டாங்க
அப்புறம்?
உங்க கடையில வேலை பாக்குற சந்தானம் தான் வேண்டும். நான் அவனோட தாய் மாமன்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.