எழுதியவர்: அ. கௌரி சங்கர்
சொல்: பீரங்கி
மேட்டுபாளையத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சார்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்.
குழந்தைகளுக்கு புதிய விபரங்களை தெரிந்துகொள்ளுவதில் தான் அளவு கடந்த ஆர்வம். இதை பள்ளி சுற்றுலா தான் நிறைவேற்றி தருகிறது.
வத்சலா அந்த சுற்றுலாவில் தன்னை மறந்து விபரங்களை கற்றுக்கொண்டு இருந்தாள்.
ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சிகரம் போன்றவற்றை பார்த்துவிட்டு குழு பூங்காவிற்குள் நுழைந்தது. சிகப்பு வண்ணம் அடித்த பழங்காலத்து வீடு ஓன்று நுழைவாயிலின் அருகில் இருந்தது. வத்சலா, தன்னுடைய சிறிய டைரியில் அப்போதைக்கு அப்போது குறிப்புகள் எழுதிக்கொண்டு இருந்தாள்.
சுற்றுலா முடிந்தது. பள்ளியில் கேட்டுக்கொண்டபடிக்கு, குழுவை சார்ந்தவர்கள் கற்றுக்கொண்ட தகவல்களின் குறிப்புகளை ஆசிரியையிடம் தந்தார்கள்.
வத்சலாவின் குறிப்பு –
பூங்காவின் வாசலில் ஒரு பீரங்கி இருந்தது. முன்பு எதிரிகளை துவம்சம் செய்வதற்கு அதை பயன்படுத்துவார்களாம். அதை பார்த்தவுடனே எனக்கு கண்ணனின் நினைவு தான் வந்தது.
கண்ணன் எங்கள் வீட்டு போமெரேனியன் நாய். அதன் மூக்கு பீரங்கி மாதிரி தான் இருக்கும்.
முற்றும்.
