100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: விரல்கள்

by admin 2
113 views

பெரிய பெரிய மெசின்களெல்லாம் இறங்கிய வண்ணம் இருந்தது. “நம்ம பொளப்பெல்லாம் நாசமாப் போச்சே என கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர் நென்மேனி மக்கள்”… தீப்பெட்டித் தொழில நம்பித்தான் அந்த ஊர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்…மூனு வேள சாப்பாடு குறையில்லாம கிடைக்குதுன்னா இந்தத் தொழிலால தான்.. நெல் வெளையிற பூமிங்கிறதுனால நென்மேனின்னு ஊருக்குப் பேருண்டு.ஆனால் அங்க வாழற மக்களுக்கு மூலத் தொழிலே தீப்பெட்டித் தொழில்தான்.. எத்தனை போராட்டங்கள்.. எத்தனை மனுக்கள்.. எதற்குமே செவிசாய்க்காத அரசு.. விரல்களுக்குள் நடனமாடிய தீக்குச்சிகளெல்லாம் , இன்று மெசினுக்குள் செலுத்தப்பட்டு மின்னல் வேகத்தில் வேலை நடந்து கொண்டிருக்கின்றது.முதலாளிபெருமிதம் கொள்வதைப் பார்த்தவுடன்… காலங் காலமாக வேலை பார்த்தவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போச்சு… இனி பொழப்புக்கு என்ன பண்ணப் போறோன்னு தெரியல. “இந்தத் தொழில் தான் உசிருன்னு நம்பியிருந்தோம்”. தீப்பெட்டி தயாரித்த கைவிரல்கள் எல்லாம் கனத்த மௌனத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன மெசின்களை…

முற்றும்.

📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!