எழுதியவர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல்
சொல்: விரல்
கந்துவட்டிக் கதிர்வேல் காட்டில் பணமழை பொழிந்தது.
பணம் வளர வளர அவரது அகங்காரம், ஆணவம் எல்லாம் சேர்ந்து வளர்ந்தது.
இவர் ஆபீஸ் ஊருக்கு வெளியே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது.
ஒரு நாள் அவரது கணக்குப்பிள்ளைசொன்னார் ‘அந்த ராசகோவலு பய நீங்க கந்து வட்டி ,மீட்டர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக ஒரு புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் தரப் போறானாம்’.
‘ஓ, அப்படியா,அவனால என் சுண்டு விரலைக் ஆஆஆ என்று இவர் போட்ட சத்தத்துடன் டமார் டிஷ் என்ற பலத்த சத்தமும் சேர்ந்தது.
ஒரு கண்டெய்னர் லாரி இவர் ஆபீஸ்சின் ஒரு பகுதியை இடித்து தள்ளி நின்றது.
தொலைக்காட்சி தலைப்பு செய்தி: எக்ஸ் எம்.எல்.ஏ கதிர்வேல் கட்டடத்தின் ஒரு பகுதியைக் லாரி இடித்தப்போது, அவரது வலதுகை விரல்கள் நசக்கப்பட்டன.
அவரது நசுங்கிய விரல்களை டாக்டர்கள் இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.எனினும் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் கூறினர்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.